×

11ம் வகுப்பு மாணவன் 11.36 மணி நேரத்தில் 1330 திருக்குறளை 133 தென்னை ஓலையில் எழுதி உலக சாதனை

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவை சேர்ந்தவர் முகமது இஷாக். ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷகீலா பானு. இவர்களின் மூத்த மகன் வஜாகத் (15) என்பவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்துகொண்டு 2 சாதனைகளை படைத்துள்ளார். இதில் முதல் சாதனையாக வண்ண வண்ண நிறத்தில் உள்ள கீயூபுக்கில் 6 கலர்களை இணைத்து கொண்டே 150 திருக்குறளை 7 நிமிடம், 41 நொடியில் உச்சரித்துள்ளார். மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 தென்னை ஓலையில் பேனா மூலம் தொடர்ந்து எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரது திறமையை பயன்படுத்தி சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில், உலக சாதனையாருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் கொடுத்து அவரிடம் மாணவர் வஜாகத் சான்றிதழ் பெற்றுக்கொண்டார். சாதனை புரிந்த மாணவன் வஜாகத்தை ஆட்சியர் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவன் வஜாகத்திடம் கேட்டபோது, ”நான் 2 சாதனைகளை நிகழ்த்துவதற்கு எனது பெற்றோர் மற்றும் தம்பி, உறவினர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். இதனால்தான் சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்தது. இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது லட்சியம்” என கூறினார்.

The post 11ம் வகுப்பு மாணவன் 11.36 மணி நேரத்தில் 1330 திருக்குறளை 133 தென்னை ஓலையில் எழுதி உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Thirukkuralai ,Mohammad Ishaq ,Raghuman Street, Guduvancheri ,Vallancheri ,
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை